மூவரடங்கிய விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப் பெறும்வரை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் வங்கிச் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க தீர்மானித்திருப்பதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை விசாரணைகள் முற்றுப் பெறும் வரை மகேந்திரன் விடுமுறையில் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு தனது விசாரணை அறிக்கையை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியிடுமென கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. இன்று (16) தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ள மேற்படி விசாரணைக் குழு தினமும் கூடி பிரச்சினையின் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆராயவிருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விசாரணைக் குழு, இதுவரையில் எந்தவொரு தனிநபரையும் விசார ணைக்குட்படுத்தியதாக தெரியவில்லை. எனினும் தரவுகள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் நோக்கில் மத்திய வங்கியின் பணப் பரிமாற்றம் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுள்ளமையை அறிய முடிகிறது.
மத்திய வங்கியின் ஆளுநருக்கெதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தமது செயற்பாட்டினை திறம்பட முன்னெடுப் பதற்காக இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து தொழில்நுட்ப ஆலோசனையை நாடியிருப்பதாகவும் கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இந்த குழுவின் விசாரணை அறிக்கைக்கு அமைவாக இறுதி செயற்பாடுகள் அமைய வுள்ளன.
திறைசேரி முறிகள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சட்டமா அதிபர் காமினி பிட்டிபான தலைமையில் மகேஷ் களுகம்பிட்டிய. சத்திமல் மெண் டிஸ் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட் டுள்ளது.
ஜே. வி. பி. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மேற்படி விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும்வரை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பதவி விலுக்குமாறு கோரிவருவது குறிப்பிடத்தக்கது.
Social Buttons