தமிழர் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்தச் சட்டதம் இறுதித் தீர்வாக அமையாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்ற அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வுத் திட்டமாக 13ம் திருத்தச் சட்டம் அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பரிந்துரை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும் நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை எட்ட இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளாது 13ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி திட்டமிட்ட வகையில் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் இராணுவ மயமாக்கலை மேற்கொள்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
Social Buttons