சிறிலங்காவில் இருந்து பிரான்சுக்கு திரும்ப இருந்தவேளை, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முருகேசு பகீரதி மற்றும் அவரது மகள் ஆகியோரது விவகாரம் குறித்து , ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் பிரான்ஸ் அதிகாரிகள் மட்டத்தில்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரையாடல்களை நடத்தியிருந்தது.
ஜெனீவாக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளில் ஒருவரும் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சருமாகிய மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் கடந்த புதனன்று பிரென்சு உயர் அதிகாரிகளுடன் இவ்விவகாரம் குறித்து உரையாடியுள்ளார்.
குறித்த கைது சம்பவம் தொடர்பில் ஏலவே சிறிலங்காவில் உள்ள பிரென்சு தூதரகரத்தினதும் மற்றும் தலைநகர் பாரிசில் உள்ள பிரென்சு வெளிவிவகார அமைச்சினதும் கவனத்துக்கு கொண்டு சென்றதன் தொடர்சியாகவே கடந்த புதனன்று (11-03-2015) ஜெனீவாவில் இந்த உரையாடல்இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணை அறிக்கை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பில் பிரான்ஸ் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்த உரையாடலின் பொழுதே பிரென்சு உயர்மட்ட அதிகாரி இக்கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார் என நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளில் ஒருவரும், அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சருமாகிய மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் கருத்துரைத்துள்ளார்.
TGTE, Transnational Government of Tamil Eelam
TGTE, Transnational Government of Tamil Eelam
Social Buttons