Latest News

March 14, 2015

புதிய சாதனை படைத்த இந்தியா!
by Unknown - 0

நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய ஆறு போட்டிகளில் 60 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.

`பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

இதில் அனைத்து அணிகளையும் கலங்கடித்த இந்தியா 60 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள் தங்கள் இஷ்டத்திற்கு மீம்ஸ்களை போட்டு இணையத்தை கலக்கி வருகின்றனர்.

இதில் ஏற்கனவே, இந்த தொடரில், இந்தியாவிடம் ஆல்- அவுட் ஆன அணிகள், கடைசி லீக்கில் மோதிய ஜிம்பாப்வேயிடமும், ஆல்- அவுட் ஆகிவிடக் கூடாது என்று சொல்லி அனுப்பி வைத்தது போலவும், ஆனால் அந்த அணி இப்படி பரிதாபமாக ஆல்அவுட் ஆனதாகவும் கலாய்க்கின்றனர்.

மேலும் அனைத்து அணிகளும் ஆல்- அவுட் ஆன ஜிம்பாப்வேக்கு ஆறுதல் சொல்வது போன்றும் கிண்டல் படங்களை பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
« PREV
NEXT »