கடந்த ஆண்டு இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டிலும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அழுத்தங்கள் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை நிறுவனங்களின் பலவீனத்தன்மையே இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதற்கான பிரதான ஏதுவெனக் குறிப்பிட்டுள்ளது.
Social Buttons