காலி , கராபிட்டிய பிரதேசத்தில் 'ஜஸ்டின் கந்த' கிராமத்தை பொலிஸாரும் , விசேட அதிரடிப்படையினரும் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
நள்ளிரவு ஆரம்பமாகிய இத்தேடல் நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரியவருகின்றது.
இப்பிரதேசத்தில் சுமார் 75 வீடுகள் உள்ளதாகவும் மனிதப் படுகொலைகள், மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய பலர் இங்கு ஆயுதங்கள் மற்றும், போதைப் பொருட்களை மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நடத்தப்பட்டுள்ள தேடலில் கஞ்சா , ஹேரோயின் உட்பட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சுமார் 40 விசேட அதிரடிப் படையினர் மற்றும் 140 பொலிஸ் அதிகாரிகள் இத்தேடலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Social Buttons