Latest News

March 27, 2015

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் TGTE
by admin - 0

" நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "

1920 ஆண்டில் இருந்து இன்றுவரை நாடுகடந்த அரசாக இயங்கும் பெலரூஸ்எனும் நாடு.
இரண்டாம் உலகப்போரில் பல ஜரோப்பிய நாடுகளை ஹிட்லரின் நாசிசப் படைகள் கைப்பற்றியதனால், பல ஜரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில், இவ்வாறான நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருந்தனர். 

ஆகையால் அவர்கள் தேசியம் காப்பாற்றப்பட்டது. 1920 ஆண்டில் பெலருசின் என்ற அமைப்பு தனது நாடு பெலரூசால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை, நாடு கடந்த அரசாங்கமாக இயங்கி வருகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்" என்றால் என்ன? தெரிய வேண்டிய தெளிவுகள்.

இவ்வரசாங்கத்தைப் பற்றித் தெரியாத இலங்கை அரசின் பிரதி நிதிகள் ஆளுக்கொருவராக வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருப்பதை நினைக்கும் பொழுது ஒருபக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் அவர்களது அறியாமையையும் எடுத்துக் காட்டுகிறது,
அந்தவகையில் புலம் பெயர்ந்து வாழும் நம் தமிழீழ உறவுகளும் ஆளுக்கொரு விதமாக கருத்துக்களைக் கூறி இவர்களால் என்ன செய்யமுடியும் இதுவரை என்ன செய்தார்கள் என்று கேட்பதற்கும் பூரண விளக்கம் தரும் விதமாக இந்த அறிக்கை உதவுமென்று நினைக்கறேன்

அண்மையக் காலத்தில் மிகப் பரவலாகப் பேசப்படும் விடயம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படுவதாகும். பரபரப்பாக பேசப்படும் இவ்விடயம் பலருக்கும் தெரியாத ஒன்றாக - பரவலாக அறியப்படாத ஒன்றாக இருக்கின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? இதனைப் பற்றிய தெளிவினை வழங்கும் இக் கட்டுரை இது.

இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரசியன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.

நாடு கடந்த அரசாங்கம் என்பது, அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர், சொந்த நாட்டில் தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாகும்.

காலப் போக்கில் இந்த அரசானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று சக்திகளையும் அதிகாரங்களையும் மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவது ஆகும்.

இரண்டாம் உலகப்போரில் பல ஜரோப்பிய நாடுகளை ஹிட்லரின் நாசிசப் படைகள் கைப்பற்றியதனால், பல ஜரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில், இவ்வாறான நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருந்தனர். 

ஆகையால் அவர்கள் தேசியம் காப்பாற்றப்பட்டது. 1920 ஆண்டில் பெலருசின் என்ற அமைப்பு தனது நாடு பெலரூசால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை, நாடு கடந்த அரசாங்கமாக இயங்கி வருகிறது.

அத்துடன் திபெத்திய பீட பூமியை சீன அரசானது ஆக்கிரமிப்புச் செய்தபோது அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா அவர்கள் இந்தியாவுக்குச் சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சுமார் 11க்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் உலகில் இயங்கிவருகிறது.

நாடு கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள்:-

1.அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்
2.தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுத்துக் கொள்ளுதல்
3.தேசியத்தின் சட்ட முறைமைகளைப் பாதுகாத்தல்
4.ஒரு தேசிய இராணுவத்தை காப்பது அல்லது கட்டி எழுப்புதல்
5.அரசியல் நிலையில் அல்லது அரசதந்திர நிலையில் நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்துதல்
6.தேசிய அடையாள அட்டை வழங்குதல்.

இன்று புலம் பெயர்ந்துவாழும் ஒவ்வொரு தமிழ் மக்களும் இலங்கையை விட்டுவெளியேறினால் இலங்கை அரசால் வழங்கப் படும் ஆள் அடையாள அட்டையின் வலு இல்லாமல் போய்விடும் அதன் பிறகு அவர் எங்கு வாழ்கின்றாரோ அவர்களுக்கு அந்தந்த நாடுகள் அவரின் நிலைக்கு ஏற்ப அடையாளத்தை உறுதிப்படுத்தும் அட்டைகள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு குடி உரிமை அதிகாரிகளால் வழங்கப்படும்
அதுவும் அந்தந்த நாடுகளை விட்டு வெளியேறும் பொது அவையும் வலுவிழந்துவிடும் அதனால் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள அனைத்து தமிழீழத்தமிழர்களும் நாடுகடந்த அரசு அவர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்தி அடையாள அட்டை வழங்க நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அதிகாரம் உண்டு

7.ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளை உருவாக்குதல்
8.தேர்தல்களை நடத்துதல்
முதலான செயற்பாடுகளை நாடுகடந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும்.
நாடு கடந்த அரசாங்கத்தினை உருவாக்கத் தேவையானவை:-

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க, ஏதாவது ஒரு வெளிநாட்டின் அனுமதி அல்லது முழு அங்கிகாரம் தேவைப்படுகிறது. 
அந்த நாட்டிலேயே நாடு கடந்த அரசாங்கத்தை நடத்த முடியும்.

நாடு கடந்த அரசாங்கத்தால் என்ன அதன் பயன் .....

1.பல வெளிநாடுகளில் தமது அரசின் அதிகாரப்படியான தூதுவர்களை நியமிக்க முடியும்.

2.வெளிநாட்டு அரசாங்கங்களுடன், ஒரு நாட்டு அரசாங்கம் போல தகுதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும்.

3.குறிப்பிட்ட நாட்டுடன் தனது பிணக்குகள் குறித்து பேச்சுவார்தை நடத்தி தீர்வுக்கான ஏதுவாக இருக்கும்.

4.பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள எமது சமுதாயத்தினை சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் பலப்படுத்துவதற்கும், எமது தாய்மண்ணில் சுதந்திரத் தமிழீழ அரசுரிமையைப் பெறுவதற்கும், உலகச் சவால்களை அனைத்துலக நிலையில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கமானது பெரிதும் உதவியாக இருக்கும்.

5.இந்தப் பயன்களின் விளைவால் இலங்கை அரசுக்கு ஒரு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தலாம் தமிழர்களுக்கு பலநாடுகளின் உதவியுடன் நிரந்தரத் தீர்வை ஏற்பாடு செய்யலாம் அதற்கான ஆதரவை புலம் பெயர்ந்துவாழும் அனைத்துத் தமிழர்களும் ஆதரிக்கவேண்டியதன் அவசியத்தை உணருங்கள்.

6.அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவருக்கு நாடுகடந்த அரசின் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணிக்கு சம்பந்தப்பட்டவரின் நியாயாதிக்க நிலையை விளக்கி அவரை நாடு கடத்துவதன் அவரின் உயிருக்கு பாதுகாப்பான உத்தரவாதம் வழங்க வேண்டியன் அவசியத்தை எடுத்துக் கூறலாம்

இவ்வாறு இன்னும் பல திறமைகள் இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கு உண்டு.

நாடு கடந்த அரசாங்கத்திற்கு பாதகம் வருமா?

ஆம். நாடு கடந்த அரசாங்கமானது செவ்வனே செயல்பட ஒரு நாட்டின் தஞ்சம் அல்லது அங்கிகாரம் தேவை. 

தஞ்சம் தரும் வெளி நாடு தனது ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இதன் அதிகாரம் இழக்கப்படக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.

ஆகவே அதன் பிரதிநிதிகள் மிகவும் நிதானமாகவும் கவனமாகம் தாம் செயற்ப்படும் நாடுகளின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படாவண்ணம் செயல்ப்பட்டு அந்தந்த நாடுகளின் மனங்களை வெல்லவேண்டும் அதன் அங்கத்தினர் சிறந்த திறன் வாய்ந்த செயல்ப்பாடுகளில் ஈடுபடுவதில் நிலை நாட்டலாம்

ஆகவே, மிகவும் பொறுமையுடனும், ஆழ்ந்த அறிவு மற்றும் அரசியல் மதிநுட்பம் கொண்டு கையாளப்படவேண்டிய விடயம் இது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்த பின்னரும் வெளிநாடுகள் தாம் விரும்பும் பட்சத்திலேயே இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். 

அதாவது ஏற்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொரு வெளிநாட்டின் தனிப்பட்ட விருப்பமாகும்.

அந்த வகையில் தென் சூடான் நாடு நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரித்துள்ளமையாடது ஒரு பெரும் நன்மை .அதைப் பகிரங்கமாகவே அறிவித்தும் விட்டது இந்நிலையில் தென்னமெரிக்க, தென்னாபிரிக்க நாடுகளில் மிகவும் ஆழமாக செயலில் இறங்கவேண்டும்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டியன?

ஈழத்தில் ஒரு இன அழிப்பு நடவடிக்கை நடந்து முடிந்துள்ள போதும் அதற்காக உலக நாடுகள் வருத்தம் தெரிவித்தது தவிர வேறொரு தீர்வையும் பேசவில்லை. ஆகவே, உலக நாடுகள் ஈழச் சிக்கலை இனங்கண்டு, தலையிட்டு, தமிழீழத்தை அங்கீகரித்தால் அன்றி அங்கு அமைதி என்பதையே காணமுடியாது.

ஆனால் உலக நாடுகள் தாமாகவே வந்து இதில் தலையிடக்கூடிய நிலை உள்ளதாகத் தெரியவில்லை.அதனால் உலகின் பலம் பொருந்திய நாடுகள் ஐக்கியநாடுகள் சபைக்கு தமிழீழத்தில் நடந்த இன அழிப்பை அறிக்கையாக வெளியிட்டு விசாரணை கோரியிருந்தது இதனூடாக இலங்கைன் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது என பல உலக நாடுகளும் இலங்கையின் சிங்கள அரசை குற்றம் சாட்டியுள்ளன எனவே நாடுகடந்த அரசுக்கு ஆபத்தில்லை என்பதே தற்போதைய நிலை எனவே இப்போதைய உலகத்தைச் செயற்பட வைக்க வேண்டும் என்றால் முதலில் ஈழ மக்கள் இப்போதைய நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று உருவாகுவதற்கும் தனித்துவம், கௌரவம், ஆசைகள், வாழ்வு என்பவற்றைப் பாதுகாப்பது பற்றித் தெளிவு கொள்ள வேண்டும்.அதைத் தெளிவு படுத்தவே இந்தக் கட்ரை.

உண்மை நிலவரம் என்னவென்றால் இலங்கையின் தனித்துவத்தை(இறையாண்மை) ஏற்றுக் கொள்ளும்படி கொழும்பு பல முரட்டு வழிகளைப் பின்பற்றும், இன்றும் பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டு கற்பழிக்கப் பட்டு தமிழர்களின் பூர்வீக இடங்களில் புத்த கோவில் களையும் சிங்கள மக்களைக் குடியேற்றியும் அனைத்துவழிகளையும் கையாள்கின்றது என்பதை உலகின் மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன.
இந்தியாவும் சில வேறு நாடுகளும் அதற்கு ஆதரவளிக்கின்றன,ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ ஆட்சி முறையால் இவற்றை உடைத்தெறிய வேண்டும்.
அதற்குத் தேவையான அனைத்துவளிகளையும் நாடுகடந்த அரசு செய்தாகவேண்டும் அதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும்
அனைத்துலக அளவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் இருந்த போதும் அதன் உலகளாவிய உட்கட்டமைப்பு மிகவும் வலுவான ஒன்று. 

புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை ஒற்றுமையாகவும் எழுச்சியுணர்வு உள்ளவர்களாகவும் கட்டிக்காத்து வந்தது புலிகள் இயக்கமே ஆகும். வெளிநாடுகளில் நிறுவப்பட்ட நிருவாக, நிதி அமைப்புகள் யாவும் முழுமையான - முறையான இயக்கத்திலேயே இப்போதும் உள்ளன. 

எனவே அவர்களைத் தடை செய்வதற்கு பல ஆண்டுகாலம் அரசு செய்த சதி முயற்சி
கருத்துபேதங்களை மறந்து நாடுகடந்த அரசுக்கு ஒவ்வொரு தமிழரும் உதவுவதன் மூலம் முதலில் தமிழர்கள் மீதான தடையை உடைத்தெறியும் காரியத்தோடு சிறந்த ராஜா ரீக உறவுகளை உலக நாடுகளுடன் மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இதனூடாக தற்பொழுது நீங்கள் அனைவரும் மிகுந்த ஒற்றுமையுடன் உங்களின் ஆதரவை நல்குவது எமது எதிகால இலட்ச்சனைக்கு உறுதுணையாகும் எனவே, தற்போது உள்நாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் வேறுபாடின்றி மக்களுக்காகச் செயற்படவேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தஞ்சம் கொடுக்க ஒரு உலக நாடு தேவை என்பதை அது ஒரு தென்சூடான் நாடாக இருக்கின்றது அத்துடன் அதுவும் எம்மைப்போல் விடுதலை போரில் இருந்து உலக அரசால் அங்கீகரிக்கப்பட்டது அதை விட மிக அவசியமாக இப்போது தேவைப்படுவது உலகம் முழுதும் வாழும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் ஆற்றல் மிகுந்த ஆதரவே யாகும்.
அதனுள் வாழும் புத்திஜீவிகள் தாங்களாகவே முன்வந்து இதற்கு பூரண ஆதரவை வழங்கி நம் எதிர்காலச் சந்ததிக்கு நாம் இழந்த மண்ணை மீட்டுக் கொடுத்து சுயநிர்ணயத்துடன் அவர்களைத் தலை நிமிர்ந்து வாழ பூரண ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டுகிறேன்


மார்க்கண்டு தேவராஜா(L,L,B) 
நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் சுவிஸ்நாட்டின் சூரிச் சப்ஹவுஷன்.துர்க்காவு.மாநிலங்களுக்கான புதிய பாராளுமன்ற உறுப்பினர்
« PREV
NEXT »

No comments