Latest News

March 27, 2015

கடும் பாதுகாப்பு ஏன் பதில் தெரியா ரணில்
by admin - 0

 யாழ்.மாவட்டத்திற்கு பல தடவைகள் நீங்கள் வந்துள்ளீர்கள்.இங்குள்ள நிலமைகளை நன்கு அறிவீர்கள்.உங்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரதமர் ரணிலிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

 
 
இன்று மாலை 6 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில்  யாழ்.ஆயர் மற்றும் பிரதமர் ரணில் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஆயர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
 
 
மேலும் இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணிலுக்கு இன்றைய தினம் பலத்த பாதுகாப்புடன் விசேட அதிரடிப் படைகள் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையிலேயே யாழ்.ஆயர் பிரதமரிடம் குறித்த கேள்வியை எழுப்பியிருந்தார்.
 
அதற்கு பிரதமர் ரணில் பதில் எதுவும் கூறாது ஆயரிடம் இருந்து விடைபெற்றார்.
 

« PREV
NEXT »

No comments