உலகிலேயே மிகவும் வரட்சியான பிரதேசமான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் இருவர் பலியாகியதுடன், மேலும் 24 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அண்டிஸில் பெய்யும் கடும் மழை காரணமான வெள்ளம், கீழே பள்ளத்தாக்குகள் மற்றும் நகரங்களுக்குள் பெருக்கெடுத்து ஓடுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொப்பியாப்போ நகரில் நதி கரையை உடைத்து பாய்கிறது.
மண்சரிவு குறித்த அச்சம் காரணமாக மீட்பு பணியாளர்கள், ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்துகிறார்கள். மேலும் மழை எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்சாரம் தாக்கி ஒருவரும், சகதியில் சிக்கி ஒருவரும் இறந்ததாக சிலி அவசரப் பணியாளர்கள் கூறுகிறார்கள்.
Social Buttons