Latest News

March 27, 2015

யாழில் பௌத்த மதத்தை பரப்ப ரணில் திட்டம்!!
by Unknown - 0


யாழ்ப்பாணம் நாகவிகாரை ஊடாக யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுக்கு பௌத்த மதத்தை கற்பிப்பது குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினர் முதலில் யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து நாகவிகாரையின் விகாராதிபதியுடன் கலந்துரையாடிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழர்கள் மத்தியில் பௌத்த மதத்தை போதிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.

இதன்போது சென்னையிலுள்ள பௌத்தவிகாரையில் இருக்கும் தமிழ் பௌத்த பிக்குகளை அழைத்துவந்து யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்கள் மத்தியில் பௌத்தத்தை போதிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், அதற்கு தான் உதவுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். 

இதன்போது சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களாக மீள்குடியேற்ற மற்றும் நல்லிணக்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் மகளீர்விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

« PREV
NEXT »