புதிய ஆட்சி என்ற முழகத்துடன் இலங்கைத்தீவில் இயல்புநிலை வந்துவிட்டதான தோற்றப்பாட்டடை ஏற்படுத்தியவாறு, புலம்பெயர் தமிழர்களின் விடுமுறைக்கால வருகையினை புள்ளிவிபரங்களுடன் உலக அரங்கில் அடுக்குவதற்கு காத்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில், புலம்பெயர் சமூகம விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு சுவிசில் USTER, WINTERTHUR ஆகி ய இடங்களில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சமகால அரசியற் பொதுக்கூட்டங்களில் கருத்துரைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தொடர்பிலான தீர்மானம், யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் முன்னெடுகப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், காணாமல் போனவர்கள் தொடர்பிலான சிறிலங்கா ஜானதிபதி ஆணைக்குழுவினை காணாமல் போனவர்களின் உறவுகள் புறக்கணிக்க எடுத்துள்ள முடிவு மற்றும் சிவில் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் ஆகியன சிறிலங்காவின் உண்மையான முகத்தினை அம்பலப்படுத்தி வருகின்றன.
இது, புதிய அரசாங்கம் புதிய ஆட்சி என அனைத்துலகத்தினை ஏமாற்றும் சிறிலங்காவின் வித்தைகளை தமிழீழத் தாயகம் விழிப்புடன் அவிழ்த்து வரும் செயல்முனைப்பாகும்.
தாயகத்தின் இம்முனைப்புக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தமிழ் சமூகமும் இவ்விவகாரத்தில் தனது பங்கினை ஆற்ற முன்வரவேண்டும்.
குறிப்பாக வரும் கோடை விடுமுறைக் காலத்தில் தாயகத்திற்கு செல்லுகின்ற புலம்பெயர் தமிழர்களின் வருகையினை புள்ளிவிபரங்களுடன் அடுக்கி, இலங்கைத்தீவில் இயல்புநிலை தோன்றிவிட்டதென்ற தோற்றப்பாட்டடையும், புலம்பெயர் சமூகம் மைத்திரி சிறிசேனவின் புதிய அரசாங்கத்தினை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் கருத்தினையும், உலக அரங்கில் முன்வைப்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் வியூகமாக இருக்கின்றது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது கூட்டத் தொடரின் தொடக்க நாள் உரையில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் தமிழ்சமூகம் நோக்கி விடுத்த அழைப்பு இதனை தெளிவாக காட்டுக்கின்றது.
இந்நிலையில் விடுமுறைக்கு தாயகம் செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் புலம்பெயர் மக்கள் சிறிலங்காவின் இவ்வியூகம் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும். சிறிலங்காவைப் புறக்கணிப்போம் என்ற உறுதிப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கு அடுத்த கட்டமாக தமிழினப்படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தும் ஒரு மில்லியன் கையெழுத்தினை நோக்கிய கையெழுத்துப் போராட்டத்திலும் பங்கெடுக்க வேண்டும் என கருத்துரைக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொலைத்தொடர்பூடாக பங்கெடுத்து கருத்துரையினை வழங்கியிருந்தார்.
ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ், ஐ.நாவுக்கான ஒருங்கிணைப்பாளர் சுகிந்தன் முருகையா, மாவீரர் குடும்பல நல மையப்பொறுப்பாளர் செ.ஜெயம், பொதுசன விவகாரங்கள் அமைச்சின் சுவிஸ் செயலர் சா.ஜெயசீலன், புள்ளிவிபரதிட்டல் குழுப்பிரதிநி மா.தேவராஜா ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
கருத்துரைகளும் பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதில்களும் வழங்கப்பட்டிருந்த இப்பொதுக்கூட்டத்தினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதியினை வென்றெடுக்கும் செயல்முனைப்பில் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் சமகால அரசியற் பொதுக்கூட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களெங்கும் முன்னெடுத்து வருகின்றது.
TGTE, Transnational Government of Tamil Eelam
Social Buttons