இதுநம்தேசம் பத்திரிகை விற்பனையாளரக்கு கொலைமிரட்டல்
கிளிநொச்சியில் சிவநகர் பகுதியில் நேற்றய தினம் குறித்த பத்திரிகையினை விற்பனை செய்து கொண்டிருந்தபோது மேற்படி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
இது நம்தேசம் பத்திரிகையின் கிளிநொச்சி மாவட்ட விநியோகஸ்தர் செல்வராசாவுக்கு புலனாய்வுத்துறையினர் எனச் சந்தேகிக்கப்படுவோரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவர் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர்ப் பகுதியில் பத்திரிகை விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிவில் உடையுடன் அங்கு வந்த புலனாய்வுத்துறையினர் மூன்று பத்திரிகையைத் தருமாறு வாங்கிப் பார்த்துள்ளனர்.
பின்னர் ‘இது நம்தேசம்” பத்திரிகையை இங்கு விற்பனை செய்யக் கூடாது என்றும், இதனை விற்பனை செய்தால் பத்திரிகையுடன் உன்னையும் எரித்துக் கொலை செய்வோம். என்று மிரட்டியதுடன் பத்திரிகையை வீதியில் எறிந்துவிட்டு சென்றுள்ளனர்
Social Buttons