Latest News

March 10, 2015

அதிரும்துப்பாக்கி கொலைகள்-இன்றும் சுட்டுக்கொலை
by admin - 0

vivasaayi
vivasaayi


மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகிலிவட்டையில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 6.00மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த சி.சுந்தரராஜ் (வயது 42) என்பரே உயிரிழந்தவராவார். 
ரி.56ரக துப்பாக்கி மூலமே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

ஸ்தலத்துக்கு விரைந்துள்ள ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்கிரம தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

« PREV
NEXT »