Latest News

March 17, 2015

மைத்திரி அரசின் கூட்டம் உடைகிறதா?பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கள்
by admin - 0

புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தும், நாட்டுக்கு இதுவரை எந்த நன்மையும் ஏற்படவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கும் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள் மற்றும் அயோக்கியர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிரிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது  மேலும் கருத்துத் தெரிவித்த அவர் …..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை அனைவரும் பொருளாதாரத்தில் புலி என எண்ணியிருந்தனர். எனினும் ரணில் விக்ரமசிங்கவிடம் எந்த பொருளாதார திட்டங்களும் இல்லை. கொழும்பு மக்கள் அவரை சரதியல் என்றே கூறுகின்றனர். ஒரு பக்கத்தில் வரிகளை அதிகாரித்து அடுத்த பக்கத்திற்கு கொடுப்பதன் காரணமாக கொழும்பு மக்கள் ரணிலுக்கு அவ்வாறு கூறுகின்றனர். இதனால் அவரது பொருளாதாரம் சரதியல் பொருளாதாரம் என்று மக்கள் சொல்கின்றனர்.

புதிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளால் நாடு வேறு திசை நோக்கி பயணித்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சரவையிலும் அரசாங்கத்திலும் இருக்கும் திருடர்களினால், அது நடக்கவில்லை எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

« PREV
NEXT »

No comments