வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மயூமூனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (16) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் செயலாளர்கள் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை , இந்தோனேஷிய விசேட தூதுவர் மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (17) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்தோனேஷிய தூதுவர் உட்பட பல அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நான்காவது சனத்தொகை கூடிய நாடான இந்தோனேஷியா தெற்காசியாவில் பாரிய பொருளாதார வளர்ச்சிகொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
Social Buttons