இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் பிரகாரம் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக இலங்கை அணியின் சங்கக்கார திகழ்கின்றார்.
அவர் இத்தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 541 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளதுடன் , சங்கக்கார சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் இப்பட்டியலில் சங்கக்கார தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
சங்கக்கார இத்தொடரில் 4 சதங்களைப் பெற்றதுடன் சாதனைகள் பலவற்றையும் நிலைநாட்டியிருந்தார். இத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களின் பட்டியலில் 2 ஆவது இடத்தில் நியூசிலாந்து அணி வீர ர் மார்டின் கப்டில் உள்ளார்.
Social Buttons