Latest News

March 25, 2015

குடிநீரில் நஞ்சு.. மூவர்; கைது! அமைச்சர் ஒருவரும் கைதாகலாம்!
by admin - 0

குடிநீரில் நஞ்சு.. மூவர்; கைது! அமைச்சர் ஒருவரும் கைதாகலாம்!

அண்மையில் ஏழாலை சிறிமுருகன் பாடசாலையினுள் வைக்கப்பட்டிருந்த குடிநீர்த்தாங்கியினுள் நஞ்சுப் போத்தல் ஒன்று காணப்பட்டதும் இதனையடுத்து இந்நீரினால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ 30 மாணவர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுவும் அறிந்ததே.


 இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பாடசாலையின் காவலாளிகள் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் பிரதேச அரசியல் வாதி ஒருவருடன் நெருங்கிய ஒருவரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்படுகின்ற தீவிர விசாரணைகளின் அடிப்படையில் வெகு விரைவில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் கைது செய்யப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இவ்வாறான ஒரு நிலமையில் அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என்பதனால் பொலிஸார் இது தொடர்பாக நீதி அமைச்சின் அனுமதியையும் ஆலோசனையையும் பெறவிருப்பதாக அறிய முடிகின்றது.


« PREV
NEXT »

No comments