முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிவது ஏப்ரல் 02 ஆம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சட்டத்தை மீறுபவர்கள் அபராதம் செலுத்த நேரிடும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிவதனை கடந்த 21 ஆம் திகதி முதல் தடை செய்வதற்கு பொலிஸார் தீர்மானித்திருந்தனர்.
இருப்பினும், தமக்குக் கிடைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும் வரையில் அந்த நடைமுறையை தற்காலிகமாக இரத்து செய்வதாக அதற்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த நடைமுறையை மீண்டும் செயற்படுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, உரிய வகையில் பாதுகாப்பான தலைக் கவசத்தை அணியாது பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு 500 ரூபா அபராதம் செலுத்தநேரிடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன், வெள்ளை நிறத்திலான கண்ணாடி கொண்ட தலைக்கவசத்தை அணிய முடியும் எனவும் 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியில் பாதுகாப்பிற்காக நிறமற்ற வெள்ளை நிற கண்ணாடி கொண்ட தலைக்கவசத்தை அணிய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.(nf)
No comments
Post a Comment