Latest News

March 13, 2015

ஒத்துழைப்புடனான சமஷ்டியையே மோடிவலியுறுத்தினார் - சுரேஷ் எம்.பி
by Unknown - 0

மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக் கூடிய ''ஒத்துழைப்புடனான சமஷ்டியே'' இலங்கையில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தர முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியுள்ளார்.

இதே விடயத்தை வலியுறுத்தி இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி அவர்கள், தன்னை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் அதனையே வலியுறுத்தியதாக அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திர பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முதல்வராக நீண்ட காலம் இருந்தவர் என்ற வகையிலும் இந்திய பிரதமராக ஒரு வருடம் கடமையாற்றியவர் என்ற வகையிலும் தனது அனுபவங்கள் மூலமே தான் இதனை கூறுவதாக மோடி அவர்கள் குறிப்பிட்டதாக பிரேமச்சந்திரன் அவர்கள் கூறினார்.

« PREV
NEXT »