ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை ஆறு மாதகாலங்களுக்கு பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளே காரணமாக அமைந்தன. அந்த நடவடிக்கைகளை விடுத்து அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி சார்பாக ஆஜரான சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அரசியல் கைதிகள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாதிருக்கின்றது. வெறுமனே ஐக்கிய நாடுகள் தொடர்பான விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தாது அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அது தவறானதென குறிப்பிட்டவர், ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை ஆறு மாதகாலங்களுக்கு பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளே காரணமாக அமைந்தன. அந்த நடவடிக்கைகளை விடுத்து அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Social Buttons