![]() |
NEWS |
புத்தளம், பாலாவி பிரதேசத்தில் புகைப்படம் எடுக்கச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் தாக்ககுதலுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய காணி ஒன்றில் நுழைந்து கம்பி வேலி அமைக்கப்படுவதை புகைப்படம் எடுக்க முயற்சித்தபோதே அவர் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த ஊடகவியலாளர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பிரதேசத்தில் உள்ள அரசாங்க காணியை சிலர் தம்வசப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய தான் இது குறித்து செய்தி சேகரிக்கும் நோக்கிலேயே புகைப்படமெடுத்ததாக அவர் குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Social Buttons