Latest News

March 24, 2015

பிரான்ஸில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது
by Unknown - 0

பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.


ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான கிரீன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானத்தில் 142 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக உள்ளூர் செய்தி பத்திரிகை ஒன்று கூறுகிறது.



விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிஞ்கை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.

அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை குறைவாகவே உள்ளது என்று பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »