காணாமல் போன அண்ணனுக்காய் போராடியமைக்காக தன் தாயுடன் இணைந்து போராடியமைக்காக மகிந்த அரசால் அதன் அரசியல் தேவைக்காக பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகா அனைத்து வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2 ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட விபூசிகா சிறுமி என்பதனால் நீதிமன்ற உத்தரவில் சிறுவர் நன்னடத்தை பிரிவிடம் கையளிக்கப்பட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிணையில் விடுதலையான தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரி தனது மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி கிளிநொச்சி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்… இந்த மனு விசாரணைக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே விபூசிகா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
Social Buttons