Latest News

March 26, 2015

ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் - மஹிந்த சமரசிங்க
by admin - 0


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை இந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தால் சில வேளைகளில் பொருளாதாரதடை விதிக்கப்பட்டிருக்கக் கூடிய அபாயம் காணப்பட்டது என நிதி ராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


இந்த விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதனை காலம் தாழ்த்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் எடுத்து முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குறுகிய காலத்தில் சர்வதேச ரீதியில் கிடைக்கப் பெற்ற வரவேற்பு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.


சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பின் ஆதரவு மட்டும் போதுமானதல்ல அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அவசியம் என்பது இதன் மூலம் புலனாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , இந்த அறிக்கையை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அனைத்து தரப்பினருடனும் சமூகமான உறவைப் பேண வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே, மனித உரிமைப் பேரவையில் எமக்கான வாக்குகள் 12 வரையில் குறையாமல் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


உள்ளக விசாரணைகள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து செப்டம்பர் மாத அமர்வகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு விசாரணைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments