கேப் டவுன் நகரிலுள்ள டைகர்பெர்க் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த அறுவை சிகிச்சை ஒன்பது மணி நேரம் நடந்திருந்தது.
ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் முயற்சித்தது அது இரண்டாவது தடவை என்று கூறப்படுகிறது.
தொழில்தர்மம் கருதி அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவரின் அடையாள விவரங்களைத் தாம் வெளியில் விடவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.
பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட ஆண்குறி முன் தோல் நீக்கத்துக்கு பின்னர் இவருக்கு கோளாறுகள் ஏற்பட அவரது ஆண்குறி அகற்றப்பட வேண்டி வந்திருந்தது.
அதன் பின்னர் வேறு ஒருவரின் வயிற்றுப் பகுதியிலிருந்து எடுத்த தோலைக் கொண்டு அவருக்கு ஆண்குறி உருவாக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment