வள்ளிபுனம்
"இனியவாழ்வு இல்லத்திற்கும்" தனது உதவிகளை விரித்துக் கொண்டது, உலகத்
தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.!!
உலகில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் மற்றும் தமிழக உறவுகளும்... இனிமேல், தமது இனிய வைபவ நிகழ்வுகளின் நினைவுகளாக ஈழத்திலும் சரி... தமிழகத்திலும் சரி அங்கு அனாதரவாக உள்ள குழந்தைகளைப் பராமரித்து வருகின்ற இல்லங்களுக்கு உணவு உடை மற்றும் கல்வி சம்மந்தமான ஏதாவது ஒரு உதவிகளை வழங்கி உதவிட ஆசை கொண்டால்... சம்பந்தப்பட்ட உறவுகளின் உதவிகளை உடனடியாகப் பெற்று அவர்களின் எண்ணப்படியே சீராக நிறைவேற்றிக் கொடுக்க உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் முன்வந்துள்ளது.
அந்த வகையில் நேற்று (09.03.2015) உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் பிரான்ஸ் தேசத்தின் முக்கிய செயற்பாட்டாளாரான திரு. யாழவன் ராஜன் அவர்களின் உறவினர்களான ஈழத்தைச் சேர்ந்த தற்போது டென்மார்க்கை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி. கருணாகரன் கிருபாஜினி தம்பதியினரானவர்கள், தங்களது அன்பு மகன் புவிகாலன் அவர்களது 5 வது பிறந்ததினத்தை முன்னிட்டு... நேற்று (09.03.2015) உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் "மக்கள் நல வாழ்வாதாரப் பிரிவான "வளர்பிறை" ஊடாக முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனத்தில் அமைந்துள்ள விழி பார்வையற்ற... காது கேளாத.. வாய் பேசாத... மற்றும் இறுதி யுத்தத்தில் உறவுகளை இழந்த 60 குழந்தைகளைத் தாங்கி வருகின்ற "இனியவாழ்வு சிறார் இல்லத்திற்கு" மதிய உணவினை வழங்கியதோடு நில்லாமல்.... 60 ஈரத்துடைப்பி (துவாய் - Towel) 60 மைலோ பைகளையும் (பைக்கற்) வழங்கி அந்த இனியவாழ்வு இல்ல சிறார்களை மகிழ்வித்து... தாங்களும் உளமகிழ்வு கொண்டுள்ளனர்.
தமது அன்புப் புதல்வனின் பிறந்தநாள் விழாவினை இவ்வாறான யுத்தங்களிலும்... விபத்துக்களிலும்... மற்றும் இயற்கை வழியில் உறவுகளையும்... உடல் உறுப்புக்களையும் இழந்த சிறார்களோடு கொண்டாடியதில் பெருமகிழ்வடைந்து ஆத்ம திருப்தியடைந்துள்ளனர்.!
உதவிகளை வழங்கிய செல்வன். புவிகாலனின் பெற்றோர்களை உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் உறவுகளும் வாழ்த்துவதோடு தமது நன்றிகளையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றனர். இவர்களைப் போன்று நல் மனம் படைத்த புலம் பெயர் உறவுகளும் தமது இனிய வைபவ நிகழ்வுகளின் நினைவாக பல உதவிகளைப் புரிவதற்கு முன்வரவேண்டுமென இனியவாழ்வு இல்ல சிறார்கள் மற்றும் அனாதரவாக சிறார்கள் சார்பாக அன்போடு வேண்டி நிற்கிறது... உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம். "அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்" "வளர்பிறை" மக்கள் நல வாழ்வாதாரப் பிரிவு, உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.

Social Buttons