மனிதர்கள் 500 ஆண்டுகள் வரை வாழ முடியும் என கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கான தலைமை அதிகாரி பில் மார்ஸ் இந்த தகவலை உறுதி படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம் தொழில்நுட்பம் இல்லாமல் பல துறைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் மரபணு, புற்று நோய் ஆகியவற்றை முன் கூட்டியே கண்டறிய முடியும் என்பதோடு மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என கூகுள் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்க தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தொழில்நுட்பத்தை கொண்டு சாவை தடுக்க முடியாது என்றாலும் நிச்சயம் நீட்டிக்க முடியும் என்று பில் மார்ஸ் கூறியுள்ளார்.
இதுவரை மனித ஆயுளை 120 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கூகுள் நிறுவனம் 500 ஆண்டுகள் வரை மனித ஆயுளை நீட்டிக்க முடியும் என்று தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.
Social Buttons