Latest News

March 13, 2015

என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின
by admin - 0

என்னை வீழ்த்­து­வ­தற்கு அமெ­ரிக்­காவும், இந்­தி­யாவும் தங்­க­ளது தூத­ர­கங்­களை வெளிப்­ப­டை­யா­கவே பயன்­ப­டுத்­தின என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ குற்றம் சாட்­டி­யுள்ளார். சீனாவை தேவை­யற்ற விதத்தில் உள்­நாட்டு அர­சி­ய­லுக்குள் இழுப்­பதன் மூல­மாக இலங்­கையின் புதிய அர­சாங்கம் இந்த நாட்­டுக்கு அநீ­தி­யான விதத்தில் செயற்­ப­டு­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். 'சௌத் சீனா மோர்னிங் போஸ்டற்கு' அளித்­துள்ள பேட்­டியில் இவ்­வாறு மஹிந்த ராஜ­பக்‌ஷ குறிப்­பிட்­டுள்ளார்.
சீனா அளித்த உத­வி­க­ளுக்­காக அவர்கள் அந்த நாட்­டுக்கு நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக இருக்­க­வேண்டும். அதற்கு மாறாக சீனாவை ஒரு குற்­ற­வா­ளி­போன்று நடத்த முயல்­கின்­றனர். சீனாவை, இது தனது நாட்டின் மீது மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­யாக கரு­த­வேண்டாம் என நான் கேட்­டுக்­கொள்­கிறேன், அவர்கள் என்னை தாக்­கு­வ­தற்குப் பதிலாக சீனாவை தாக்­கு­கின்­றனர், சீனா இதன் கார­ண­மாக இலங்­கைக்கு உத­வு­வதை நிறுத்தக்கூடாது. நான் சீனா சார்­பான நபர் என்­கின்­றனர். நான் சீனா சார்­பான நபரோ அல்­லது இந்­தியா, அமெ­ரிக்கா சார்­பான நபரோ அல்ல.
நான் இலங்கை சார்­பா­னவன். நான் இலங்­கையை அபி­வி­ருத்தி செய்ய விரும்­பினேன். அந்த விட­யத்தில் எனக்கு உத­வு­வ­தற்­கான வளங்­க­ளையும், விருப்­பத்­தையும் அவ்­வேளை சீனா மாத்­தி­ரமே கொண்­டி­ருந்­தது. உதா­ர­ணத்­திற்கு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையும், விமான நிலை­யத்­தையும் நான் இந்­தி­யா­வுக்கு வழங்க முன்­வந்தேன், ஆனால் அவர்கள் அதில் ஆர்வம் காட்­ட­வில்லை. ஆகவே நான் யாரிடம் செல்­வது, எனக்குத் தேவை­யான நிதியை அவ்­வேளை தரக்­கூ­டி­ய­தா­க­யி­ருந்­தது சீனா மாத்­தி­ரமே. கொழும்பு துறைமுக நகர திட்­டத்­துக்கு உரிய நடை­மு­றை­களை பின்­பற்­றாமல் அனு­மதி வழங்­கப்­பட்­டது என தெரி­விக்­கப்­ப­டு­வதில் உண்­மை­யில்லை என அவர் தெரி­வித்­துள்ளார். அதி­கா­லை­யி­லி­ருந்து இரவு வரை மக்கள் என்னை பார்ப்­ப­தற்­காக வந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். இதுவே எனது புது­வாழ்க்கை. அவர்கள் என்னை அர­சி­ய­லுக்கு மீண்டும் வரு­மாறு கோரு­கின்­றனர். எனக்கு எதி­ராக வாக்­க­ளித்­த­தற்­காக தாங்கள் மன்­னிப்பு கேட்­ப­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர். நான் அவர்­க­ளிடம் என்னை ஓய்­வெ­டுக்க விடு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்ளேன் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். இலங்­கையின் தற்­போ­தைய அர­சியல் நிலையை சுட்­டிக்­காட்டி கருத்து தெரி­வித்­துள்ள அவர் பாராளு­மன்­றத்­திலும், அதற்கு வெளி­யேயும் எதிர்க்­கட்சி என்ற ஒன்று இல்­லாத நிலையை உலகில் வேறு எங்கும் நான் கண்­ட­தில்லை. மக்கள் தங்கள் துய­ரங்­களை தெரி­விப்­ப­தற்கு எங்கு செல்­வார்கள் என கேள்வி எழுப்­பி­யுள்ளார். பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வீர்­களா என்ற கேள்­விக்கு நேர­டி­யாக பதி­ல­ளிக்­காத அவர், மக்கள் என்ன சொல்­கி­றார்கள் என பார்ப்போம். நான் மீண்டும் அதி­கா­ரத்­திற்கு வரு­வது குறித்து இன்­னமும் தீர்­மா­னிக்­க­வில்லை என அவர் பதி­ல­ளித்­துள்ளார். ஜன­வ­ரியில் நடை­பெற்ற தேர்­தலில் தான் தோல்­வி­ய­டைந்­த­மைக்கு அமெ­ரிக்­கா­வையும், மேற்­கு­ல­கையும், இந்­திய புல­னாய்வு பிரி­வி­ன­ரையும் ராஜ­பக்‌ஷ குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.
இது மிகவும் வெளிப்­ப­டை­யான விடயம்,அமெ­ரிக்கா மற்றும் நோர்வே என்பன எனக்கு எதி­ராக செயற்­பட்­டன. பகி­ரங்­க­மான விடயம். றோவும் எனக்கு எதி­ராக செயற்­பட்­டது என அவர் குறிப்­பிட்டார். நான் இந்­தி­யா­விடம் ஏன் இப்­படி செய்­கி­றீர்கள் என கேட்டேன். நீங்கள் இவ்­வாறு செயற்­ப­டு­வது வெளிப்­ப­டை­யான விடயம் என அவர்­க­ளிடம் சுட்­டிக்­காட்­டினேன். இலங்கை மண்ணை நட்பு நாடொன்­றிற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்­க­மாட்டேன் என நான் அவர்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்தேன். ஆனால் அவர்­க­ளிடம் வேறு திட்­டங்கள் இருந்­தன என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். என்னை வீழ்த்­து­வ­தற்கு அமெ­ரிக்­காவும், இந்­தி­யாவும் தங்­க­ளது தூத­ர­கங்­களை வெளிப்­ப­டை­யா­கவே பயன்­ப­டுத்­தின என்றும் மஹிந்த ராஜ­பக்‌ஷ குறிப்­பிட்­டுள்ளார்.
சீனாவின் நீர்­மூழ்­கிகள் இலங்கைக்கு வந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சீன நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு அது குறித்து அறிவிப்போம். சீனா ஜனாதிபதி இங்கு வந்ததால் நீர்மூழ்கிகள் வந்தன. சார்க் மாநாட்டுக்காக 2008 இல் இந்திய பிரதமர் இங்கு வந்தபோது எத்தனை கப்பல்களும், நீர்மூழ்கிகளும் இங்கு வந்தன என பாருங்கள். - எனவும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »