Latest News

March 29, 2015

விமான விபத்தில் பலி­யான மாண­வியின் கடைசி குறுந்­த­கவல்
by admin - 0

ஜேர்மன் விமான விபத்தில் பலி­யான பாட­சாலை மாணவி ஒருவர் 'வட்ஸ் அப்' மூலம் அனுப்­பிய உருக்­க­மான ‘குறுஞ்­செய்தி’ பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
ஸ்பெயினின் பார்­சி­லோனா நக­ரி­லி­ருந்து, ஜேர்­மனின் டுசெல்டார்ப் நக­ருக்கு 150 பய­ணி­க­ளுடன் சென்ற, ஜேர்மன் விங்ஸ் A320 German Wings என்ற விமானம், பிரான்ஸ் நாட்டின் அல்ப்ஸ் மலைப்­ப­கு­தியில் மோதி விபத்­துக்­குள்­ளா­னது.
இந்த விபத்தில் பலி­யா­ன­வர்­களில் 67 பேர் ஜேர்­ம­னி­யர்­க­ளென்றும், 45 பேர் ஸ்பானி­யர்கள் என்றும் தெரி­ய­வந்­துள்­ளது. ஜேர்­ம­னி­யர்­களில் 16 பாட­சாலை குழந்­தை­களும், 2 ஓபெரா பாட­கர்­களும் அடங்­குவர்.
ஜேர்­ம­னியின் ஹால்டர்ன் நக­ரி­லுள்ள உயர்­நிலைப் பாட­சா­லையில் படிக்கும் மாண­வர்கள், 2 ஆசி­ரி­யர்­க­ளுடன் ஸ்பெயி­னுக்கு சுற்­றுலா சென்­றி­ருந்­தனர். சுற்­று­லாவை முடித்துக் கொண்டு ஜேர்­மனி திரும்பும் போது விபத்தில் பரி­தா­ப­மாக பலி­யா­கினர்.

விமான விபத்தில் பலி­யான மாண­வியின் கடைசி குறுந்­த­கவல்
குறுந்­த­கவல்
இந்­நி­லையில் சுற்­றுலா சென்ற மாணவி எலேனா பிளஸ் (வயது 16) என்­பவர் விமானம் புறப்­ப­டு­வ­தற்கு முன் தனது தோழி­யான பிலிப்­பா­வுக்கு 'வட்ஸ் அப்' மூலம் குறுஞ்­செய்தி ஒன்றை அனுப்­பி­யுள்ளார்.

அதில், ‘வீட்­டிற்கு வரு­வதை நினைத்தால் மிக்க மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது என்றும், தாமதம் இல்­லாமல் விரைவில் வீட்­டிற்கே சென்று விடுவேன்’ எனவும் அனுப்பி இருந்தார்.

இது­கு­றித்து பிலிப்பா கூறு­கையில், சுற்­றுலா முடிந்து வீட்­டிற்கு செல்­வதை எலேனா பிளஸ் பெரிதும் எதிர்­பார்ந்­தி­ருந்தார் என்றும், சுற்­றுலா சென்ற இடங்­களை உட­னுக்­குடன் போட்டோ எடுத்து தனக்கு அனுப்பி மகிழ்ச்­சி­ய­டைந்தார் எனவும் தெரி­வித்­துள்ளார்.

மேலும் இந்த உல­கத்தை சுற்றி வர வேண்டும் என்­பதை வாழ்நாள் கன­வாக கொண்ட தன் தோழி, தற்­போது உல­கத்தை விட்டு போய்­விட்டார் எனவும் உருக்­க­முடன் கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு மெழுகுவர்த்தி ஏற்றி பலியான மாணவர்களுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »