Latest News

March 29, 2015

ஏப்ரல் 23 பாரா­ளு­மன்­றத்தை கலைக்­கா­விட்டால் போரா­டப்­போ­வ­தாக" மஹிந்த பிர­தமர் முன்­னணி "அறி­விப்பு
by admin - 0

vivasaayi,ஏப்ரல் 23 பாரா­ளு­மன்­றத்தை கலைக்­கா­விட்டால் போரா­டப்­போ­வ­தாக மஹிந்த பிர­தமர் முன்­னணி அறி­விப்பு
மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தப்­படி ஏப்ரல் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கலைக்க நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் அதற்கு எதி­ராக மக்­க­ளுடன் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்­தப்­போ­வ­தாக "மஹிந்த பிர­தமர் முன்­னணி" தீர்­மா­னித்­துள்­ள­தாக பிவி­துறு ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­பன்­பில தெரி­வித்­துள்ளார்.

ம.ஐ.முன்­னணி, தேசிய சுதந்­திர முன்­னணி, ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி, பிவி­துறு ஹெல உறு­மய ஆகிய அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் "மஹிந்த பிர­தமர் முன்­னணி" என்ற அமைப்பை அமைத்­துள்­ள­தா­கவும் அதன் எதிர்­கால அர­சியல் நட­வ­டிக்­கைகள் குறித்து ஆழ­மாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கவும் கம்­பன்­பில தெரி­வித்தார்.

ஏப்ரல் 23 ஆம் திகதி அர­சாங்­கத்தை கலைக்­கா­விட்டால் மக்­களை திரட்­டிக்­கொண்டு ஆர்ப்­பாட்டம், ஊர்­வலம், வீதி போராட்­டங்­களை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கடந்த காலங்­களில் "மஹிந்த பிர­தமர் முன்­னணி" நுகே­கொடை, கண்டி, இரத்தினபுரி ஆகிய நகரங்களில் நடத்திய கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »