Latest News

March 29, 2015

காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு- தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் முழு அடைப்பு!!
by admin - 0

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுவித்திருந்த இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்புடன் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தி கைதாகினர். மாலை 6 மணிக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டு இயல்பு நிலைமை திரும்பியது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு புதிதாக அணைகளை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி புதிய அணைகளைக் கட்ட கர்நாடகா அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. கர்நாடகாவின் இந்தப் போக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் சங்கங்கள் ஒன்று திரண்டு இன்று காலை 6 மணி முதல் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

இம்முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வணிகர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக அரசும் அண்ணா தி.மு.க.வும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என தெரிவிக்கவில்லை. இருப்பினும் போராட்டக் குழு உறுப்பினர்கள் நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரியிருந்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும் ஆனால் முழு அடைப்பு தேவையில்லை என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி கூறியிருந்தது.

முழு கடை அடைப்பு பொதுவாக காவிரி டெல்டா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த முழு அடைப்புப் போராட்டம் முழு அளவில் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மிகக் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளிலும் மக்கள் மிகக் குறைவான அளவிலேயே பயணித்தனர்.

சரக்கு போக்குவரத்து நிறுத்தம் தமிழகம்- கர்நாடகா இடையேயான சரக்குப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டது. தமிழகம்- கர்நாடகா எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தி கைதாகினர். இந்தப் போராட்டங்களில் அரசியல் கட்சியினர் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வன்முறை சம்பவங்கள் எங்கும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அனைத்து மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. சென்னையில் 12 ஆயிரம் போலீசார் நேற்று இரவில் இருந்தே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

« PREV
NEXT »