உத்தம வில்லன் படத்தில் உத்தமனும் நான்தான், வில்லனும் நான்தான். ஒவ்வொரு நடிகருமே இந்தப் படத்தில் அவர்களைப் பார்ப்பார்கள் என்றார் கமல் ஹாஸன்.
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்' படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், உத்தமவில்லன் படம் குறித்து நடிகர் கமல், இன்று பத்திரிகையாளர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
படம் குறித்து அவர் கூறுகையில், எனது இல்லத்தில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவதற்கு காரணம், நான் கே.பாலச்சந்தர் அவர்களை முதன்முதலாக சந்திக்கச் சென்றது இந்த இல்லத்தில் இருந்துதான். அதுபோல், இந்த இல்லத்தில் சோகமான நிகழ்வுகளுக்காகவும் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறேன். இது சோகமான நிகழ்வுகளுக்கான சந்திப்பு இடமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான், தற்போது இந்த சந்தோஷமான விஷயத்திற்காகவும் இந்த இல்லத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று பேச்சை தொடங்கினார்.
Social Buttons