முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கு எதிராக கொழும்டப நீதவான் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிதி மோசடி விவகாரம் தொடர்பாகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சரின் வெளிநாட்டு பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Social Buttons