Latest News

March 24, 2015

இரட்டை குடியுரிமை
by admin - 0

இலங்கையில் ராகபக்ஷ ஆட்சியில் இருந்தவேளை , கோட்டபாய ராஜபக்ஷ ஒரு அதிரடி உத்தரவை போட்டார். அதன் பிரகாரம் , பொதுவாக வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதாகும்.


 இதனால் பல தமிழர்கள் இரட்டை குடியுரிமையை விண்ணப்பிக்க முடியாது தவித்தார்கள். ஒன்பது நாடுகளின் பிரஜைகள் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. 


நேற்றைய தினம் முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுககளின் பிரஜைகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்பும் பிரதம குடியிருப்பாளர் 250,000 ரூபாவினை செலுத்த வேண்டும், அவரது மனைவி 50000 ரூபாவினை செலுத்த வேண்டும், 22 வயதுக்கும் குறைந்த திருமணமாகாத பிள்ளைகள் 50000 ரூபா செலுத்தி இரட்டைக் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும்.

இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்வது தொடர்பில் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமானது. இதேவேளை, இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் 2000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்ததாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

« PREV
NEXT »

No comments