Latest News

March 12, 2015

பாணந்துறை மனித எச்சங்கள் குறித்து விசாரணை!
by Unknown - 0

பாணந்துறை - உயன்கெலே பகுதியில் காலி வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றின் கீழ் மாடியில் இருந்து இரண்டு பெண்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மனித எச்சங்கள் தமது சகோதரிகளினுடையது என தெரிவித்து ஒருவர் இன்று பாணந்துறை தெற்கு காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களின் பின்னர் தனது சகோதரிகளை காணச் சென்ற போதே குறித்த சகோதரர் மண்டை ஓடுகளையும், மனித எச்சங்களையும் கண்டுள்ளார்.

மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பாணந்துறை சட்ட மருத்துவ அதிகாரியும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மனித எச்சங்களின் பகுதிகள் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை, பாணந்துறை காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


« PREV
NEXT »