புதுக்குடியிருப்பு வல்லிபுனம் பகுதியில் கசிப்பு உற்பத்தி மிகவும் அதிகமாக காணப்படுவதாகவும், இதனால் கலாச்சாரம் சீரழிக்கப்படுவதாகவும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
செல்லா எனப்படும் செல்வராசா என்பவரே பத்து பேர் வரையான நபர்களை ஒன்றிணைத்து இவ்வாறு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவருவதாகவும்,
இவர் புதுக்குடியிருப்பு பொலிசாரின் செல்வாக்கு மிகுந்தவராக காணப்படுவதனால் பொலிசில் செய்யப்படும் புகார்கள் செல்லுபடியற்றனாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவிலிருந்து முன்னர் கைது செய்யப்பட்ட இவர் மீது இரண்டு வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கடந்த வாரம் காளி கோவில் ஆற்றுப் பகுதியில் ஐந்து இடங்களில் ஐந்து தொழிலாளிகளை வைத்து கசிப்பு உற்பத்தியினை மேற்கொண்டிருந்த வேளை கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் முல்லைத்தீவு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவ்விடத்திற்கு பொலிசார் விரைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் ஓடித்தப்பியுள்ளதுடன், இரண்டு பரல் கசிப்பு பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Social Buttons