Latest News

March 25, 2015

பேஸ்புக் தகவல்களை சிலருக்கு மட்டும் மறைக்க
by admin - 0

vivasaayi
Facebook
நம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு, நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள,  முகப்புத்தக சமூக இணையதளம் சிறந்த ஒரு மேடையாக நமக்குக் கிடைத்துள்ளது. சில நேரங்களில், முக்கியமான தகவல் ஒன்றைப் பதிவிட விரும்புவோம். ஆனால், அந்த குறிப்பிட்ட தகவலை மட்டும் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நம் நண்பர்கள் பார்க்கக் கூடாது என எண்ணுவோம்.

 ஏற்கனவே, நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு நம் நிலைத் தகவல் சென்றுவிடும். அதெப்படி ஒரு சிலருக்கு மட்டும் அதனை மறைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? ஆம், முகப்புத்தகத்தில் அதற்கான வசதி உள்ளது. அந்த வசதியைப் பயன்படுத்தும் வழிகளைப் பார்க்கலாம்.

முதலில், முகநூலில்  நுழையவும். உங்கள் பக்கத்திற்குச் செல்லவும். தகவல் பதியத் தரப்படும் ஸ்டேட்டஸ் பாக்ஸில், உங்கள் தகவலைப் பதியவும். இனி “Post” பட்டனுக்கு இடதுபுறமாக உள்ள “Friends” பட்டனில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் “More Options” என்பதில் கிளிக் செய்திடவும். போஸ்ட் பட்டனுக்கு இடது புறம் இது இருக்கும்.

இப்போது கிடைக்கும் கட்டத்தில் “Custom”என்பதில் கிளிக் செய்திடவும். இதனைத் தொடர்ந்து “Custom Privacy” டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் உள்ள “Don't share this with என்ற பிரிவில், “These people or lists” என்ற பாக்ஸில், எந்த நண்பர்கள் இந்த தகவலைப் பார்க்கக் கூடாதோ, அவர்கள் பெயரைக் கிளிக் செய்திடவும். நீங்கள் டைப் செய்திடத் தொடங்கியவுடன், அந்த எழுத்து கொண்ட உங்கள் நண்பர்கள் பெயர் காட்டப்படும். இந்த பட்டியலில் இருந்து, நீங்கள் எண்ணும் நண்பர்களின் பெயர்களைத் தேர்வு செய்திடலாம். இந்த பெயர்கள் “These people or lists” என்ற பிரிவில் காட்டப்படும்.
இதே போல, உங்கள் நண்பர்களில் யார் மட்டும் பார்க்கலாமோ, அவர்கள் பெயரை மட்டும் இணைக்கலாம். மாறா நிலையில், உங்கள் நண்பர்கள் அனைவரின் பெயர்களும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அந்த தகவல் எனில், “Friends” பாக்ஸில் “X” என்பதில் கிளிக் செய்து, அவர் பெயரை நீக்குங்கள். பின்னர், அந்த குறிப்பிட்ட நபரை “Share this with” என்ற பிரிவில் “Share this with” என்ற பாக்ஸில் சேர்த்துவிடுங்கள். மேலே “Don't share this with” என்ற பிரிவில் பெயர்களை அளித்தது போல இதில் செயல்படவும். முடித்தவுடன் “Save Changes” என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி, உங்களுடைய தகவல் கட்டத்திற்குத் திரும்பவும். உங்களுடைய குறிப்பிட்ட தகவலை யார் எல்லாம் பார்ப்பார்கள் என்று உறுதிப்படுத்திக் கொள்ள, உங்கள் மவுஸை “Custom” என்ற பட்டன் மீது சற்று நகர்த்தவும். அங்கு எழும்பி வரும் கட்டத்தில், இதனைப் பார்க்கப் போகிறவர்கள் பெயர்கள் காட்டப்படும். இந்த பட்டன் தான், நாம் தொடக்கத்தில் “Friends” எனக் குறிப்பிட்ட பட்டன். நீங்கள் மாற்றங்களை மேற்கொண்டதால், அதன் பெயர் மாறியுள்ளது. இனி “Post” என்பதில் கிளிக் செய்து, உங்கள் தகவலை, நீங்கள் தேர்ந்தெடுத்த நபர்கள் மட்டும் பார்க்கும் வகையில் போஸ்ட் செய்திடவும்.

மேலே கொடுத்துள்ள செட்டிங்ஸ் அமைப்பை, இனி பதிவு செய்திட இருக்கும் அனைத்துத் தகவல்களுக்கும் பயன்படுத்தலாம். நண்பர் ஒருவரை, நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்க (“unfriend”) உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் உங்கள் பதிவுகளைக் காணக் கூடாது என எண்ணினால், உங்களுடைய பேஸ்புக் பக்கத்தில், மேலாக உள்ள நீல நிற கட்டத்தின் வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். அங்கு “Settings” என்பதில் கிளிக் செய்து setting  பக்கம் செல்லவும். நீங்கள் ஏதேனும் தகவலை எழுதிக் கொண்டிருந்தால், Click “Leave This Page” to go to the “Settings” page என்று ஒரு மெசேஜ் காட்டப்படும். எழுதப்படும் தகவல் இல்லாமல் போய்விடுமே என்ற கவலை இல்லாமல், கிளிக் செய்து பக்கத்தை விட்டு நகர்ந்து செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். வேலை முடிந்த பிறகு திரும்பினால், உங்கள் பக்கத்தில் நீங்கள் பாதியில் விட்டுச் சென்ற தகவல், நீங்கள் தொடர்வதற்காகக் காத்திருக்கும். “Settings” பக்கத்தில், இடதுபுறம் காட்டப்படும் option ல் , “Privacy” என்பதில் கிளிக் செய்திடவும். “Privacy Settings and Tools” என்ற திரை காட்டப்படும். “Who can see my stuff?” என்ற பிரிவில், “Who can see future posts?” என்பதற்கு வலது புறம் உள்ள “Edit” என்பதில் கிளிக் செய்திடவும். இன்னும் பல ஆப்ஷன்களைக் காட்டும் வகையில், இந்தப் பிரிவு விரிவடையும். இங்கு “Custom” பட்டன் அருகே உங்கள் மவுஸ் செல்லும்போதெல்லாம், நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் காட்டப்படும். இங்கு காட்டப்படும் விருப்பங்களிலிருந்து (options) தேர்ந்தெடுக்க “Custom” பட்டனில் கிளிக் செய்திடவும். “Custom Privacy” என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

இதில், நீங்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களைத் தேர்ந்தெடுத்து, “Save Changes” என்பதில் கிளிக் செய்திடவும். இந்த செட்டிங்ஸ், இனி எதிர்காலத்தில் நீங்கள் இடப் போகும் அனைத்து தகவல்களுக்கும் பொருந்தும். நீங்கள் மறுபடியும் “Privacy Settings and Tools” திரைக்கு வந்தவுடன், “Remember” என்ற பாக்ஸில், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள், நீங்கள் போஸ்ட் செய்த இடத்தில் ஏற்படுத்திய மாற்றங்களே என்றும், அவை உங்களால் அப்டேட் செய்யப்பட்டுள்ளன என்றும் காட்டப்படும்.
« PREV
NEXT »