பொலனறுவை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், 3 விநாடிகளுக்கு சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிரிதலே, பகமுன, கதுருவெல மற்றும் தியபெதும ஆகிய பிரதேசங்களிலே இந்த அதிர்வு ஏற்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேல் வானிலிருந்து அதிக வெளிச்சத்துடன் பூமியை நோக்கி வந்த மர்ம பொருள் காரணமாக, அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
Social Buttons