கொழும்பின் சில பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தையொட்டியே இந்த மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன.
"இவ்விரு நாட்களிலும் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரலை இலகுபடுத்தும் வகையிலேயே இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்" என பதில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Social Buttons