அத்துடன் புதைக்கப்பட்ட சிசுவின் சடலமும் நீதிவான் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்திலேயே மேற்படி சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
குளியாப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் நீதிவானின் உத்தரவை பெற்றுக்கொண்ட பொலிஸார் குளியாப்பிட்டிய பதில் நீதிவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் சடலத்தை தோண்டியெடுத்துள்ளனர்.
இதேவேளை சிசுவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம் தொழில் புரியும் தும்புத்தொழிற்சாலையொன்றுக்கு அருகிலுள்ள வீட்டினருகிலேயே சிசுவின் சடலம் புதைக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
Social Buttons