அவுஸ்திரேலியாவில் நீதிக்கான நடைபயணமும் பேரணியும் அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டிருக்கு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரியும், படையினரின் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழரின் வாழ்விடங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும், படையினரிடம் சரணடைந்த அல்லது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரியும் இப்பேரணி நடைபெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளன்வேவலி என்ற இடத்திலிருந்தும் காலை 10.30 மணிக்கு சண்சைன் என்ற இடத்திலிருந்து ஆரம்பித்த நடைபயணத்தில் 30 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டனர். மாலை 3 மணிக்கு மெல்பேணின் மத்தியிலுள்ள State Library என்ற இடத்தையடைந்த நடைபயணம் அங்கு நடைபெற்ற நீதிக்கான பேரணியில் இணைந்துகொண்டனர்.
ஏழு வயதான சிறுமி ஒருவரும் தனது தாயாருடன் இணைந்து 25 கிலோமீற்றர்கள் தூரத்தை ஐந்து மணித்தியாலத்தில் நடந்து முடித்தமை அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீதிக்கான பேரணியில் இணைந்துகொண்டு மனிதவுரிமைவாதியும் பிரபல சட்டவாளருமான றொப் ஸ்ராறி தமிழ் அகதிகள் அவையைச் சேர்ந்த றெவர் கிராண்ட் மனிதவுரிமை செயற்பாட்டாளர் சூ வோல்ற்றன் உட்பட பலர் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு தமிழ்ச்செயற்பாட்டாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாலை நான்கு மணிக்கு நிகழ்வு சிறப்புற நிறைவுபெற்றது.
Social Buttons