பிரித்தானியா குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ம் ஆண்டு நிறைவு விழா
நேற்றுமுன்தினம் (28/02/2015) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வினை
மாணவர்கள் வேட்டியும் சட்டையும் அணிந்தும் மாணவிகள் சேலையணிந்தும்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.தொடர்ந்து
பேச்சு,கவிதை,நாடகங்கள் மற்றும் பல கலை நிகழ்வுகளுடன் நடைபெற்றது.தொடர்ந்து
மாணவர்கள் ஆசிரியர்களுக்கான மதிப்பளித்தலுடன் நிகழ்வுகள் நிறைவு
பெற்றது.குறிப்பாக இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Mr.Cllr Peter
Lamb Leader,Crawley Borough Council அவர்கள் மற்றும் Crawley Mp Mr Henry
Smithஅவர்களும் வருகை தந்து நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர் மாணவர்களின்
கலைகலாச்சார நிகழ்களுடன் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து கண்டு கழிக்க
விழா மிகவும் சிறப்புற நடைபெற்றது.
நன்றி ஈழம் ரஞ்சன்
Social Buttons