![]() |
JAFFNA |
யாழ். மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக போதைப்பொருள் பாவனை குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து வந்த போதிலும் அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் மட்டத்திலும் பல்வேறு வடிவங்களில் போதைப்பொருட்கள் பாவனைக்கு வந்துள்ளன. மாணவர்கள் புகைப்பொருளாகவும் மெல்லுகின்ற பாக்கு மற்றும் லேகிய வடிவிலும் பாவனையில் இருப்பதாக கூறப்படுகின்றது. போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களின் மீது பாடசாலை நிர்வாகமோ, தனியார் கல்வி நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது.
அதனால் தனிப்பட்ட பாதிப்புக்கள் மற்றும் நிறுவனத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கருத்தில் கொண்டு மேல் நடவடிக்கைகளை தவிர்த்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலைமை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வசதியாக இருப்பதோடு புதியவர்களும் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
Social Buttons