இடுப்பிற்கு
கீழ் இயங்காத முன்னாள் போராளி டயஸ்குமாருக்கு வாழ்வாதார உதவியினை
வழங்கியது, உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான... பின்தங்கிய
நிலையில் உள்ள அதாவது வாழ்வாதரங்களை இழந்த உறவுகள்... உடலுறுப்புக்கள்
மற்றும் உதவிகளற்ற நிர்க்கதியான குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்குத்
தேவையான தொழில் உதவி மற்றும் மருத்துவ கல்வி உதவிகளை வழங்கி சமீப காலமாக
பேருதவி புரிந்து வருகின்ற உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது
நிர்க்கதியான குடும்பங்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வருகின்றமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அந்த வகையில் மார்கழி மாதத்திற்கான உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள்
ஆணையத்தின் வாழ்வாதாரப் பயனாளியான, வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த திரு.
டயஸ்குமார் சாந்தகுமார் என்கின்ற முன்னாள் போராளியானவர் வாழ்வாதாரமின்றி
தனது ஏழைப் பெற்றோருடன் மிகவும் துயரங்களுடன் தவித்து வந்தார்.
இவர் மண் மீட்பிற்காக போராடிய வேளையில் இடுப்பின் கீழ் படுகாயமடைந்து
எழும்பி நடமாட முடியாத நிலையில் படுத்த படுக்கையிலிருக்கும் போதே படுக்கை
புண் உருவாகி மிகவும் வலிகளுடன் சிரமப்பட்டு வந்த வேளை, அவரை இனங்கண்டு
கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது அவருக்கான
வாழ்வாதார நிதியாக அதாவது அவரின் பெற்றோரின் தொழில் முயற்சிக்காக ஒரு
இலட்சம் இலங்கை ரூபாய்களை வழங்கி உதவியுள்ளது.
திரு. டயஸ்குமார் என்பவர் வவுனியா நெளுக்குளத்தில் தனது பெற்றோருடன் இருந்த
வேளையில் கடந்த மாரிகால மழையில் இவர் வாழ்ந்த மண்வீடு மழையில் இடிந்து
போய் கூரை வீட்டினில் வாழ்ந்து வரும் நிலையில் தனது சிகிச்சைக்காக அவரது
உறவினர் வீட்டிற்கு வந்து நின்ற வேளையிலே ஆணையத்தின் உதவி கொண்டு
சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேற்படி திரு. டயஸ்குமார்... தனது பெற்றோரின் உதவியுடன் இந்த வாழ்வாதார
நிதியின் மூலமாக கோழி வளர்ப்பில் ஈடுபட போவதாகவும் அதன் மூலமாக தனது
மருத்துவ தேவைகளை நிறைவேற்றியும்... தனது பெற்றோரின் வாழ்வாதாரமும் ஓரளவு
பூர்த்தி செய்து கொள்ள முடியுமென நம்பிக்கை தெரிவித்ததுடன் உலகத்தமிழ்
மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திற்கும் உதவிகள் நல்கிய உறவுகளுக்கும்
தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இவருக்கான உதவிகளை ஆணையம் மீது கொண்ட பேரன்பு காரணமாக ஆணையத்தின் அன்பு
வேண்டுதலுக்கிணங்க ஒரு இலட்சம் ரூபாய்க்களை நேரடியாக டயஸ்குமாரிடம் கொண்டு
சேர்த்த வடமாகாண சபை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. M. தியாகராஜா
அவர்களுக்கும்...
அவருக்கான உதவிகள் நல்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் உலகத்தமிழ் மக்க
ள்
மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் மனமார்ந்த நன்றிகள்.!!
“அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்”
– உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
Social Buttons