இலங்கை மீது யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் மீளவும் குற்றம் சுமத்த பிரிததானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரி;த்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இந்த முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாராளமன்றில் இலங்கை யுத்தக் குற்றச் செயல் தொடர்பிலான ஆவணப்படமொன்று திரையிடப்பட உள்ளது.
செனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரேவின் நோ பயர் ஸோன் கில்லிங் பீல்ட்ஸ் ஆவணப்படம் சிங்கள மொழியில் திரையிடப்பட உள்ளது.
இந்த ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட், சிபனோய் மெக்டொனாவ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்திற்கு யுத்தக் குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Social Buttons