கமரா பொருத்தப்பட்ட 'ட்ரொன்' விமானம் ஒன்று கொழும்பு கோட்டை பகுதியில் பறக்கவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வேளையில் அந்த விமானத்தை 5 சீனர்களும் இலங்கையர் ஒருவரும் கீழிருந்து இயக்கியுள்ளனர்.
இந்த விமானத்தின் மூலம் நகரை படம்படிக்க அனுமதி கோர வேண்டும் என தமக்கு தெரியாது என அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் தேவையான ஆவணங்களை பொலிஸில் சமர்பித்ததால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நவீன இயந்திரங்கள் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் குறித்து சட்டம் இயற்றி மக்களை தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக இது குறித்து எம்மிடம் கருத்து தெரிவித்த சட்டத்தரணி குறிப்பிட்டார். அதன்மூலம் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை நீக்க முடியும் என அவர் கூறினார்.
![]() |
www.vivasaayi.com |
Social Buttons