Latest News

March 06, 2015

பகீரதியை 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு
by admin - 0

ட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரை 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரண செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.     ஜெயகணேஸ்  பகீரதி மற்றும் அவரது மகளும் கிளிநொச்சியில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு பிரான்ஸில் இருந்து விடுமுறையில் வந்து மீண்டும் பிரான்ஸிற்கு திரும்பும் வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.  

 1997 ஆம்ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரைக்கும் கடற்புலிகளின் பெண்கள்  பிரிவுக்கு தலைவியாக இந்தார் என்றும் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டார் என்றும்  தகவல் கிடைக்கப்பெற்றதை அடிப்படையாக கொண்டே பகீரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  வட்டாரங்கள்  தெரிவித்திருந்தன .   

 இந்தநிலையில் முதலில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடாத்தியிருந்தார் என்றும் மேலதிக விசாரணைக்காக 90 நாள்கள் தடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி பெற்றிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.    இதேவேளை ,  பகீரதி பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »