Latest News

March 06, 2015

மைத்திரி அரசின் போலி நாடகங்கள்
by admin - 0

மைத்திரி அரசின் போலி நாடகங்கள்
மைத்திரி

புலனாய்வுப் பிரிவுகளில் இருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உளவாளிகள் புதிய  அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தி வருவதுடன் வெளிநாடுகளுடன் ஏற்படுத்தி வரும் சிறந்த தொடர்புகளை சீர்குழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்களோ என்ற பாரதூரமான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இப்படி இவர் சொல்வதை ஏற்பதற்கு தமிழர்கள்,உலக தலைவர்கள் என்ன முட்டாள்களா?
அண்மையில் இலங்கைக்கு வந்த 10 தமிழர்கள் கட்டுநாயக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்தும் ஒரு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி பாலேந்திரன் சம்மந்தமாகவும் உடனடியாக சட்டத்தை செயல்படுத்துமாறு சர்வதேச ரீதியில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து சிங்கள ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய  போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயக்குமாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லையென்றால் அவரை தமது யாழ் விஜயத்திற்கு முன்னதாக விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்திருந்த போதிலும் புலனாய்வுப் பிரிவினர்  இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக ஒரு நாடகம் மைத்திரியின் அரசு நடத்த அதை செய்தியாக வெளியாகிறது இது என்ன மைத்திரி என்ன சாதரன ஒரு ஆளா? இவரால் இராணுவ புலனாய்வு துறையை கட்டுப்படுத்த முடியாதா?
அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னை சந்தித்த தினத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பிரான்ஸிலிருந்து இலங்கை வந்து மீண்டும் பிரான்ஸ் திரும்ப, விமான நிலையம் சென்ற போது முருகேசு பகீரதி என்ற பெண்ணையும் அவரது 8 வயது மகளையும் கைது செய்தனர் இதில் புலனாய்வுத்துறைதான் சம்பந்தம் அரசு தாங்கள் சம்பந்தம் இல்லை என்பதை எந்த மடையன் நம்புவான்.

இந்த புலனாய்வு பிரிவினரும்,இராணுவமும் அரசாங்கத்தின் கிழ் இல்லையா? மைத்திரி  விடுதலை செய் என்றால் இவர்கள் விடுதலை செய்யமாட்டார்களா? இப்படியான புதிய அரசின் செயல்கள் தாங்கள் தப்பித்து கொள்ள இப்படியான வேடிக்கையான கதைகளை கூறி வருகிறார்கள். அப்படி இவர்கள் சொல்வது சரியாயின் இன்றும் மகிந்த சகோதர்ர்கள்தான் ஆட்சி செய்கிறார்களா?

சரவணை மைந்தன் 
« PREV
NEXT »