சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவினால் வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை மறைத்துவைத்திருக்கும் களஞ்சியசாலை, இன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டது.
வெலே சுதா, இலக்கம் 875 சிங்காரமுல்லை, பியகம வீதி களனி, என்ற விலாசத்திலேயே களஞ்சியப்படுத்தி வைக்க பாவிக்கபட்ட குறிப்பிட்ட களஞ்சியசாலை திறக்கபட்டது அங்கே,,,,
ட்ரக்டர்கள் உலவு இயந்திரம் 26 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாவும் அவற்றின் கியர்பெட்டி மற்றும் எஞ்சின் பாகங்கள் கழற்றபட்டு அங்கு ஹெரோயின் மறைத்து கொண்டு வரப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது .
அதேவேளை குறித்த ட்ராக்டர்கள் துறைமுகத்தில் இருந்து எவ்வாறு பரிசோதிக்கப்படாமல் விடுவிக்கபட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.
No comments
Post a Comment