சர்வதேச யுத்தக் குற்ற அறிக்கையை தாமதித்து வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசேன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தில் புதிதாக சிறிலங்காவில் ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில் இந்த விசாரணை அறிக்கையை தாமதாக வெளியிட தீர்மானித்திருப்பதாக கூறியுள்ளார்
யுத்தக்குற்ற வாளிகளை தண்டிப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்து கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிக்கையை தாமதிப்பதன் மூலம், விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க இன்னும் கால அவகாசம் கிடைக்கும்.
எனவே இந்த விசாரணைகளுக்கு புதிய தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment